🌊பேரழிவு பற்றி - ⭐சூர்யா

  |   Kollywood

அகரம் அமைப்புடன் 📰 தி ஹிந்து, புதிய தலைமுறை நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றன. தி ஹிந்து குழுமத்தின் தலைவர் ராம், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சத்ய நாராயணா, அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா, சிவகுமார், ராம சுப்ரமணியம், தமிழருவி மணியன், தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், நடிகர் பார்த்திபன், நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நந்தா, ஏஎல் உதயா, அருமை சந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்👏. விழாவில் சூர்யா பேசுகையில், "தமிழ் மக்களாகிய நாம் தொன்றுதொட்டு இயற்கையைப் போற்றி, மதித்து 🙏வணங்கி வருகிறோம். அப்படிபட்ட நாம் 🌳இயற்கையை நேசிக்காமல் போனதால்தான் இதை போன்ற இயற்க்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். 'யாதும் ஊரே' என்பது ஒரே ஒரு மனிதரின் முகம் அல்ல. இது நிவாரண பணியில் ஈடுபட்ட பல்வேறு மக்கள் மற்றும் இளைஞர்களின் முகம்," என்றார் சூர்யா 👏👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬