⭐பாண்டே அபாரம் 🇮🇳 இந்தியா வெற்றி🎉

  |   கிரிக்கெட்

:fag_in:இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5⃣வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 330 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வார்னர் - 122 மற்றும் எம் மார்ஸ் - 102 ரன்கள் எடுத்தனர். 331 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ⭐பாண்டே மற்றும் ⭐ரோஹித் நிதானமாக ரன்களை சேர்த்து கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமையில் ⭐தோனி சிக்ஸர் அடித்து அவுட் ஆக, போட்டி சூடு பிடித்தது. 4 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் பாண்டே பவுண்டரி அடித்து தனது முதல் ஒரு நாள் சதத்தை எடுத்தார். 2 பந்து மீதம் உள்ள நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது. ⭐மனிஷ் பாண்டே ஆட்டநாயகனாக மற்றும் ⭐ரோஹித் ஷர்மா தொடர் நாயகனாக தேர்ந்தேடுக்கபட்டனர். ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬