⭐ரபடா, ⭐ஸ்டோக்ஸ் கலக்கல்🎉

  |   கிரிக்கெட்

தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அலஸ்டயர் குக் (27 ரன்) ரபடாவின் 🔴பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அலெக்ஸ் ஹாலஸ் 60 ரன்னிலும், நிக் காம்ப்டன் 45 ரன்னிலும், ஜேம்ஸ் டெய்லர் ரன் ஏதுமின்றியும், ஜோ ரூட் 50 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அந்த அணி 223 ரன்களுக்கு 5⃣ விக்கெட்டுளை இழந்து தடுமாறிய போது பென் ஸ்டோக்சும், பேர்ஸ்டோவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர் . முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5⃣ விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து நல்ல நிலையை எட்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 74 ரன்களுடனும், பேர்ஸ்டோ 39 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க தரப்பில் ரபடா 3⃣ விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், மார்கல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬