லோதா கமிட்டியின் அறிக்கை📝

  |   கிரிக்கெட்

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி, 🇮🇳இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை 📝 சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில் முக்கியமாக, 🇮🇳இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், ஐ.பி.எல். அமைப்பையும் தனித்தனி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட் கவுன்சில் வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். 🇮🇳இந்திய கிரிக்கெட் வாரியதில் உள்ளவர்களின் குறைகளை கேட்க குறை கேட்கும் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். 🇮🇳இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்க தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இரட்டை ஆதாயம் தொடர்புடைய பிரச்சினைகளை கையாள நன்னடத்தை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் அதிகாரிகளை நியமித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬