ஒரே இன்னிங்க்சில் 👦பிரணவ் 1009 ரன்கள்🎉 😱

  |   கிரிக்கெட்

திருமதி, K.C காந்தி பள்ளி🏫 அணி சார்பாக HT பாந்தரி கோப்பையில் 🏆 பங்கேற்ற பிரணவ், பள்ளிகளில் நடக்கும் போட்டியில் சாதனை புரிந்துள்ளார் பிரணவ். வெறும் 327 பந்துகளில் 1009 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 📆1899ஆம் வருடம் ⭐ஆர்தர் காலின்ஸ் என்பவரால் எடுக்கப்பட 628* ரன்களை அசாதரணமாக கடந்தார் இவர்👏. "300 ரன்களை கடந்ததும், எனது பயிற்சியாளர் ஹரிஷ் ஷர்மா அடித்து ஆடு என்று ஊக்குவித்தார்" என்று தன்மையாய் கூறினார் பிரணவ்😄. அவர்களது அணி 1465-3 ரன்களில் டிக்ளர் செய்தனர். சச்சின் டெண்டுல்கர் இந்த சிறுவனுக்கு ட்விட்டரில் "ஒரே இன்னிங்க்சில் 1000 ரன்களை கடந்ததற்கு வாழ்த்துகள், கடினமாக உழைத்தால் பல உயரங்களை எட்டி பிடிக்கலாம்" என்று வாழ்த்துகளை💐 தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬