'வார்தா' புயல்: சுற்றளவு 90. கி.மீ அளவில் உள்ளது

  |   செய்திகள் / Kollywood

'வார்தா' புயல் சென்னை வடக்கில் இருந்து கரையை கடக்க தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் அடுத்த அரை ஒரு மணிநேரத்திற்கு குறைவாக இருக்கும் என்றும் 2.30 மணிக்கு மேல் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் மையப்பகுதி பிற்பகல் 3.30 மணிக்கு கரையைக் கடக்கும் என்றும் மேலும் புயலின் தாக்கம் 6 மணி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 30 மீட்பு பணி அணிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்தியா கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் "இன்று பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை தங்களது வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

சென்னை மாநகராட்சி உதவி எண்கள் : 25619206, 25619511, 25384965, 25383694

சென்னை மாநகராட்சி WhatsApp: 94454 77207, 9445477203, 9445477206, 9445477201

தமிழ் செய்திகளை WhatsApp-யில் பெற +916385196136 குரூப்பில் சேர்க்கவும்