'வார்தா' புயல்: 2 மணிக்கு கரையைக் கடக்கும்

  |   செய்திகள் / Kollywood

வார்தா புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணிக்கு கரையைக் கடக்கும் தற்போது புயலின் ஒரு பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை இருக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மற்றும் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 கி.மீ. உயரத்துக்கு எழக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடலூரில் பெரும் ஆபத்து எச்சரிக்கை என் 8யும் மற்றும் கிருஷ்ணம்பட்டினம் துறைமுகத்தில் 7யும் ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகளை WhatsApp-யில் பெற +916385196136 குரூப்பில் சேர்க்கவும்