👔 ராம மோகன ராவ் பணிநீக்கம் 😳

  |   செய்திகள் / Kollywood

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ₹147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கியது💰. அவரை சிபிஐ அதிகாரிகள் கைது⛓ செய்தனர். சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் வீடுகளில்🏡 வருமான வரித்துறையினர் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். தலைமைச் செயலக அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமோகன ராவ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த இவர், இன்று தலைமைச் செயலாளராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬