பாக். - நியூ. : நியூசிலாந்து தொடர் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

பாக். - நியூ இடையே நடந்த 3⃣–வது ஒரு நாள் போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 47.3 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்திலும் (82), கனே வில்லியம்சனும் (84) அபாரமாக ஆடினர். நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 5⃣ விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து ‘டக்வர்த்–லூயிஸ்’ விதிப்படி 45 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நியூசிலாந்துக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதன் பிறகு நியூசிலாந்து அணி 42.4 ஓவர்களில் 7⃣ விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து 3⃣ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது🎉. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2⃣–0⃣ என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஸ்கோர்கார்டு: *400

Original Image Credit: Twitter/@ICC

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬