🇮🇳-🇦🇺 T20 : 3⃣-0⃣ என்ற கணக்கில் 🇮🇳 அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

🇮🇳-🇦🇺 இடையே சிட்னியில் நேற்று நடந்த 3⃣வது T20 போட்டியில் 200 ரன்களை கடந்து இந்திய அணி அபாரமாக வென்றது. ஆஸ்திரேலியா அணியின் வாட்சன் 124* 💥ரன்கள் எடுத்து அபாரமாக ஆடியதால் 20 ஓவரில் 197 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா அணி. 197 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியின் ரோஹித்(52) மற்றும் கோலி(50) ஆகியோரின்👍 அபார ஆட்டத்தால் 12 ஓவரில் இந்திய அணி 122 ரன்கள் எடுத்தது. ரோஹித், ரைனா ஆகியோரின் விக்கெட் விழுந்ததும், சற்று தொய்வுடன் காணப்பட்ட இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. யுவராஜ் கடைசி ஓவரில் ஒரு பௌண்டரி, மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரைனா பௌண்டரி அடித்து இந்திய அணி 3⃣ விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது🎉. முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் 🇮🇳இந்திய அணி 3⃣-0⃣ என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது👌.

Original Image Credit: Twitter/@CricketAus

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬