⭐வாசிம் அக்ரம் இதிலும் 'கிங்' கா❓

  |   கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவனான ⭐வாசிம் அக்ரம், 🔴பந்து வீசுவதில் மற்றும் கிங் அல்ல சூதாட்டத்திலும் கிங் தான் என்று கூறியுள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ⭐ஷகில் ஷேக். எதற்காக இவர் இப்படி கூறினார் தெரியுமா❓ ஆசிய கோப்பை🏆 தொடரில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விசாரிக்க, ஒரு விசாரணைக் கமிட்டியை நியமிக்கவிருந்தனர். இதற்கு ⭐வாசிம் அக்ரம் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஷகில் ஷேக் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "⭐வாசிம் அக்ரம் இதை பற்றி பேச தகுதியில்லாதவர், அவருடைய பழைய கோப்புகளை திறக்க வேண்டாம் என பார்க்கிறேன்" என்றார். இப்படி அவர் குறிப்பிட்டது, நீதிபதி மாலிக் முன்பு ஒரு காலத்தில் 💰ஊழலில் வாசிம் அக்ரமும் ஈடுபட்டார் என்பதை குறித்துத் தான். மேலும் அவர், "அக்ரமின் பந்து வீச்சு எனக்கு தெரியும், நான் அவரின் பந்தில் 2⃣ சிக்சர்களையும்🙌 அடித்துள்ளேன்" என்றார். அக்ரம் இதற்கு பதில் கொடுப்பாரா❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬