ஆசிய கோப்பையில் 🏆 - 🇮🇳அணியின் வெற்றி, கற்றுத் தந்த பாடம் ⁉

  |   கிரிக்கெட்

T20 உலகக்கோப்பையை🏆 வெல்வதற்கு அதிகம் வாய்ப்புள்ள அணி 🇮🇳இந்தியா தான் என்பதை ஆசிய கோப்பையை கைப்பற்றி இந்திய அணி நிரூபித்துள்ளது. மேலும் அணியிலுள்ள இளைய வீரர்களாகிய பாண்டிய மற்றும் பும்ராவின் பங்குகளும் பாரடிற்குரியவை.👏 அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்👀:-

🔰 கேப்டன் தோனி: தோனி மீண்டும் கேப்டனாக தனது பெயரை நிலை நிருத்திவிட்டார். அவரை குறை கூறிய அனைவருக்கும் அவர் பதிலடி கொடுத்து விட்டார்.💪

🔰 🇮🇳 அணியின் அபாரமான பேட்டிங் லைன்-அப்: ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, தோனி, சுரேஷ் ரைனா... இந்த நீளமான பட்டியலில் யுவராஜ் சிங்கும் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 🇮🇳இந்திய அணியின் வெற்றிக்கு இவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு போட்டிகளில் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.👍

🔰ஆல்-ரவுன்டர்களின் எழுச்சி: கபில் தேவ், மனோஜ் பிரபாகர், இர்பான் பதான் ஆகியோருக்கு பிறகு 🇮🇳இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி ஆல்-ரவுண்டர்கள் யாரும் அமையவில்லை. இந்நிலையில் ஹார்திக் பாண்டிய, 7⃣ விக்கெட்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான ஆல்-ரவுண்டராக மாறியுள்ளார்.👌

🔰பும்ரா-நெஹ்ரா ஜோடி : 22 வயதான பும்ரா, 36 வயதான நெஹ்ராவுடன் ஜோடி சேர்ந்து 🇮🇳இந்திய அணிக்கு சிறப்பான பந்து வீச்சு கூட்டனியை அமைத்து தந்துள்ளனர். 👏

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit : IANS