சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம், குஜராத் லயன்ஸ் அணி இன்று மோதுகிறது👍

  |   கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் அணியின் சொந்த மண்ணான ராஜ்கோட் மைதானத்தில் இன்று குஜராத் அணியை எதிர் கொள்கிறது. இதில் அனைவரின் கவனமும் ஷிகார் தவான் மீது தான் இருக்கும்😳. இதுவரை தோல்வியை கண்டிராத குஜராத் லயன்ஸ் அணியை தோற்கடிக்க ஷிகார் தவான் சிறப்பாக ஆட வேண்டும். மும்பை அணியுடன் நடந்த கடந்த போட்டியில் வார்னர் அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் பந்துவீச்சை பொருத்தமட்டில், முஸ்தாபிசூர் ரஹ்மான், பரீந்தர் ஸ்ரான், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். குஜராத் லயன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் பின்சிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்குரியது. 😟 அவருக்கு பதிலாக ⭐ட்வேயின் ஸ்மித் போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது. 💍திருமணத்திற்கு பிறகு இன்று தான் ⭐ரவீந்தர் ஜடேஜா குஜராத் அணியில் பங்கேற்கிறார். ⭐ஜேம்ஸ் பால்க்னரின் ஆட்டத்தை தவிர்த்தால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில், குஜராத் அணி சிறப்பாகவே செயல் பட்டு வருகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬