ஹிந்தியில் உருவாகும், 🎥'அக்னி நட்சத்திரம்'😱

  |   Kollywood

1988-ம் ஆண்டு,🎬மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 🎥அக்னி நட்சத்திரம் படத்தை 'அக்னி நட்சத்திரா' என்ற பெயரில் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்குகிறார். அமிதாப் பச்சன் மற்றும் பர்ஹான் அக்தர் நடிப்பில் 🎥வாசீர் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பிஜோய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கிடைத்த வெற்றியை அடுத்து, ஏற்கெனவே தெலுங்கிலும், இந்தியிலும் உருவாகி இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இதனை மீண்டும் இயக்குகிறார் பிஜோய். படத்தில் நடிப்பவர்கள் பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார், இயக்குநர் மணிரத்னத்திடம் முன்னாள் உதவி இயக்குனராக இருந்தவர் தான் பிஜோய் நம்பியார்.