IPL🏆: பூனே💪 அணியில் கஹவாஜா❓

  |   கிரிக்கெட்

புனே அணியினர், IPL போட்டியில் 7⃣ வது இடத்தில உள்ளனர். கெவின் பீட்டர்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அணியில் உஸ்மான் கஹவாஜாவை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அதைப்பற்றி புனே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் கூறிய போது, " பீட்டர்சனிற்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, அணியில் யாரை சேர்க்கலாம் என்ற போது அனைவரும் உஸ்மான் கஹவாஜா அணியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்கின்றனர். இருப்பினும் விசா, போன்ற சிக்கல் உள்ளத்தால் அதை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஷ் லீக் போட்டியில் பங்கேற்ற உஸ்மான் கஹவாஜா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். மேலும் பூனே அணியில் ஏற்கனவே 5⃣ ஆஸ்திரேலியா வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்- ஸ்டீவென் ஸ்மித், மார்ஷ், ஆடம் சம்பா, பீட்டர் ஹண்ட்ச்கோம்ப், ஸ்காட் போலந்த் 👍.