IPL🏆 ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது புனே அணி👍

  |   கிரிக்கெட்

இன்று ஹைதராபாதில், ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் IPL போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பூனே அணி💪. டேவிட் வார்னர் தலைமையில், அடுத்தடுத்து 3⃣ போட்டிகளை வென்ற ஹைதராபாத் அணியினர் பேட்டிங் வரிசை மிகவும் சிறப்பாக உள்ளது. முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் புவனேஷ்வர் குமார் அவர்களின் சிறப்பான பந்து வீச்சு, ஹைதராபாத் அணிக்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் புனே அணியினர் சிறப்பான தொடக்கத்தோடு, தொடரை தொடர்ந்தாலும், அடுத்ததடுத்து 4⃣தோல்விகளை சந்தித்துள்ளது பூனே அணி😕. IPL புள்ளிகள் பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது பூனே அணி. அணியின் பேட்டிங் ரஹானே, ஸ்மித், பிளேஸ்சிஸ், தோனி😎 ஆகியோரால் சிறப்பாக அமைத்துள்ளது. பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஏமாற்றத்தை அளித்தாலும், முருகன் அஷ்வின் சிறப்பாக செயல்படுகிறார்🙌.