⭐அஜித் பற்றி விஷால் பேட்டி🎤

  |   Kollywood

நடிகர் சங்கம் சார்பாக ஏப்ரல் 17 ஆம் தேதி நடந்த நட்சத்திர கிரிக்கெட்🏏 போட்டி வெற்றிகரமாக நடந்ததற்கு நன்றி🙏 கூறும் விதமாக ஒரு சந்திப்பு ஒன்று நடத்தினார்கள். அந்த சந்திப்பில் நிகழ்ச்சிக்காக உதவிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி🙏 தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க செயலளார் விஷாலிடம், "⭐அஜித் கிரிக்கெட்🏏 நிகழ்ச்சிக்கு வராதது ஏன்" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு "ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்தையும் மதிக்கவேண்டும், நான் வரவில்லை என்று சொல்கிறவரை வந்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. எங்களுக்கு அவர் மீது எந்த வகையிலும் கோபமில்லை, அவர் வராததற்கு விளக்கம் சொல்லணும்கிற அவசியம்கூட அவருக்கு இல்லை, எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல, பிரச்சினையும் பண்ணமாட்டேன், ஐ லவ் அஜித்❤, ஐ லவ் விஜய்❤, ஐ லவ் ரஜினி❤, ஐ லவ் கமல்❤ அண்ட் ஐ லவ் ஆல் ஆக்டர்ஸ்❤." என்று அவர் பதிலளித்துள்ளார். அந்த சந்திப்பில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்👌

📲 Get கோலிவுட் on Whatsapp 💬