"சல்மான் கானை பற்றி நான் ஏதும் கூறுவதற்கில்லை" 🔈 கோலி

  |   கிரிக்கெட்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளார். தென்னமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளதை பற்றி கோலியிடம் கேட்ட போது, "பலர் அவர்களது கருத்தை தெரிவித்துள்ளனர், நான் இதை பற்றி கூற எதுவும் இல்லை, இது நான் எடுத்த முடிவல்ல, ஆகையால் இதற்கும் நான் பதில் அளிப்பது சரிவராது" என்று கூறியுள்ளார்.