மில்லர் நீக்கம்😟 புதிய கேப்டனாக விஜய் நியமனம்👍

  |   கிரிக்கெட்

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான 7–வது லீக் ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாட இருக்கும் நிலையில் அந்த அணியின் கேப்டன் டேவிட் மில்லர் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எஞ்சிய ஆட்டங்களுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக, எம்.விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளூர் போட்டியில் தமிழக அணிக்கு 13 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து இருக்கிறார். இந்த ஐ.பி.எல். சீசனில் எம்.விஜய் 6 ஆட்டங்களில் ஆடி 143 ரன்கள் எடுத்துள்ளார்.