ஊடுருவலுக்கு பிறகு சமாதானமா❓

  |   செய்திகள்

கடந்த 9-ம் தேதி சீன🇨🇳 ராணுவ வீரர்கள் 276 பேர் அருணாச்சல பிரதேசத்திற்குள் ஊடுருவியது. பின்னர் அவர்கள் சில மணி நேரம் அங்கேயே முகாமிட்டு பின்னர் திரும்பி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது இந்த சம்பவம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை சீன🇨🇳 ராணுவம் இந்திய எல்லையில் நுழைய முயன்ற போது, அதை இந்திய வீரர்கள் தடுத்துள்ளனர்👍. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் கைகளால் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கியதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைகலப்பு சம்பவத்தை தொடர்ந்து சீன ராணுவத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகள் ஒரு மொழிபெயர்ப்பாளருடன் இந்திய ராணுவ அதிகாரியை👮🏼 சந்தித்து, இரண்டு சாக்லேட் பாக்கெட்கள்🍫 மற்றும் ஒரு பரிசு பெட்டியை🎁 கொடுத்து சமாதானம் செய்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬