ஒருதலைபட்சமான நடவடிக்கை 🔈 விஜய் மல்லையா 😠

  |   செய்திகள்

"ஒருதலைபட்சமாக என்னிடம் விசாரிக்காமலேயே என்னை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர் அமலாக்க துறையினர்" என தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அவர், "வங்கி கடன் மோசடி😷 தொடர்பாக என் மீது அமலாக்க துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் 2-ந்தேதி 🇮🇳இந்தியாவை விட்டு நான் வெளியேறும் போது எனக்கு எதிராக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. கைது வாரண்டும் பிறப்பிக்கவில்லை. பின், நான் தப்பி சென்றதாக 🇮🇳இந்திய அரசும், ஊடகங்களும் குற்றம் சாட்டின. என் மீதான வழக்கை ஒருதலைபட்சமாக, என்னிடம் விசாரிக்காமலேயே என்னை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர் அமலாக்க துறையினர். கடன்💸 பாக்கி தொடர்பாக வங்கிகள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்" என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬