முகமது அமீரை பாராட்டும் மிஸ்பா உல் ஹக்👏

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையே நடக்கும் 4⃣ டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 1⃣ல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. எந்த மைதானத்தில் 5⃣ ஆண்டு தடை பெற்றாரோ, அந்த மைதானத்தில் இருந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். இவர் தடைபெற்ற காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். தற்போது 5⃣ ஆண்டுகளுக்குப் பிறகும் அவர், தனது திறமையை இழக்கவில்லை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். மேலும் அவர் , ‘‘அவர் வேகமாக பந்து வீசுவது, ஸ்விங் செய்வது, அவருடைய கட்டுப்பாடு ஆகியவற்றை பார்த்தீர்கள் என்றால், எல்லாமே அப்படியே இருக்கிறது👍. அவர் இன்னும் உலகின் சிறந்த🔝 பந்து வீச்சாளராக முடியும். அவர் தடையில் இருந்து மீண்டு வந்தபின் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்த தொடரில் நெருக்கடி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும், அதை அவர் சிறப்பான முறையில் எதிர்கொள்வார். இப்போட்டியின் மூலம் அவரது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் ’’ என்று மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார்👏.