🇮🇳இந்திய பயிற்சியாளர்களாக விரும்பும் முன்னால் கிரிக்கெட் வீரர்கள்👍

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று BCCI தெரிவித்திருந்தது. தேர்வு குழு தலைவரான சந்தீப் பட்டீல், அணியின் இயக்குனராக பணியாற்றிய ரவிசாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் 🇮🇳இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், பல்வீந்தர் சிங் சாந்து, ஆகியோரும் இந்த போட்டியில் தற்போது உள்ளனர். இதில் வெங்கடேஷ் பிரசாத் 2007-2009 வரை 🇮🇳 இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் 2007 T20 உலகக்கோப்பை🏆 அணிக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1983 இந்தியா முதல் முறையாக உலககோப்பை🏆 வென்ற அணியில் இடம் பெற்றவர் பல்வீந்தர் சிங் சாந்து. இதனால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நாளையுடன் விண்ணப்பம் செய்தவதற்கான தேதி முடிகிறது, அதனால் மேலும் சிலர் பயிற்சியாளர்👍 பதவிக்கு விருப்பம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬