சோனியா காந்தி: நீதிமன்றத்துக்கு வெளியே சுமூக தீர்வு 💰

  |   செய்திகள்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யார் அணை பகுதியில், கேரள காங்கிரஸ்✋ சார்பில் ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி மையம்💐 நிறுவப்பட்டுள்ளது. இதை சோனியா காந்தி கடந்த 2005-ம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த மையத்தின் கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹீதர்⚒ கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப் பட்டது. இதில் கட்டுமான நிறுவனத்துக்கு ₹3.5 கோடி💰 பாக்கி வைத் திருப்பதாகக் கூறி சோனியா காந்தி மற்றும் அப்போது இருந்த அமைச்சர்கள் 4⃣ பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி மையம் கட்டியதற்கு பாக்கி ஏதும் வைக்கவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளது. இதைப் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா 📢கூறும்போது, “பில் தொடர்பாக சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬