🎥'பிரேமம்' ⭐'நிவின் பாலி' மீண்டும் தமிழில்👏

  |   Kollywood

🎥'நேரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ⭐நிவின் பாலி,🎥'அவியல்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படமும் 🎥'பிரேமம்' புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எடுக்கபட்டவையே. 🎥'நேரம்' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை. மலையாளத்தில் அமோக வெற்றி🎉 பெற்ற இந்த படத்திற்கு தமிழில் நல்ல விமர்சனங்கள் இருந்தாலும், வணிக ரீதியாக படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் ⭐நிவின் பாலி கன்னடத்தில் வெளியான 🎥'உலிதவரு கண்டந்தே' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். கவுதம் ராமச்சந்திரன்🎬 இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் இன்று தொடங்கியது👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬