"மும்பை தாக்குதலில்☠ பாகிஸ்தானுக்கு பங்கு" மவுனம் கலைத்தது சீனா

  |   செய்திகள்

2008 நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய மும்பை தாக்குதலில் 164 பேர்👥 உயிரிழந்ததோடு, 308 பேர் காயமடைந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கினை சீனா🇨🇳 ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் UN🌐 பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்பு நாடுகளும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தீவிரவாதிகள் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, தல்ஹா சயீத், ஹபீஸ் அப்துல் ரவுஃப் ஆகிய மூன்று தீவிரவாதிகளுக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தன.ஆனால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சீனா இதை தடுத்து நிறுத்தியிருந்தது. 3⃣ தீவிரவாதிகளுக்கான தடையை நிறுத்தி வைத்ததற்கான சீனாவின் முடிவு நாளையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பற்றியும், மும்பை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து இதற்காக அளிக்கப்பட்ட நிதியுதவிகள் பற்றியும் சீன தொலைக்காட்சியில் ஆவணப்படமாக ஒளிபரப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு🇵🇰 ஆதரவு திரட்டி, தன் நாட்டின் மதிப்பை குறைக்க வேண்டாம் என்று சீனா கருத வாய்ப்புள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬