செல்போன்📱 டவர் கதிர்வீச்சிலிருந்து வரும் பாதிப்புகள்😱

  |   செய்திகள்

நொய்டாவை சேர்ந்த நரேஷ் சந்த் குப்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில்⚖, செல்போன்📱 டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பொதுமக்களுக்கும்👪, விலங்குகளுக்கும்🐶 ஏற்படும் உடல்நல பாதிப்புகளை நிரூபித்தார். தலைவலி, தூக்கமின்மை, மயக்கம் உள்ளிட்ட நரம்பியல்😔 சார்ந்த பிரச்சினைகளில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தலான மூளை கட்டிவரை இந்த கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும்😱. தேனீக்கள், குருவிகள் உள்ளிட்ட பறவைகள்🐦, விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்றும் கூறினார். ஆகவே, செல்போன்📱 டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவை கணிசமாக குறைத்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட கூறினார். குடியிருப்புகள்🏢, பள்ளிகள்🏫, ஆஸ்பத்திரிகள்🏥, சந்தைகள் மற்றும் மக்கள் நிறைந்த இடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செல்போன்📱 டவர்கள் நிறுவ தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே இப்படி நிறுவப்பட்ட செல்போன் டவர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, செல்போன் டவரில் ஏற்படும் தீங்குகளை பற்றி விளக்கி கூறினார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறை, நொய்டா நிர்வாகம், நொய்டாவில் செல்போன்📱 டவர்கள் அமைத்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ்📜 அனுப்ப உத்தரவிட்டனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬