கோலிவுட் வெற்றியை தொடர்ந்து டோலிவுட்டில் 🎥 'மெட்ரோ'👏

  |   Kollywood

ஆனந்த கிருஷ்ணன் 🎬இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 🎥'மெட்ரோ'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ⭐சிரிஷ் சரவணன், ⭐பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக நடித்த ⭐சிரிஷ் சரவணன் கேரக்டரில் ⭐நாகசைதன்யா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தமிழில் நாயகனாக நடித்த ⭐சிரிஷ், தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்க இருக்கிறார். ⭐பாபிசிம்ஹா கேரக்டரில் அவரே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழில் இயக்கிய 🎬ஆனந்த் கிருஷ்ணன் தெலுங்கிலும் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬