மதுரையில் அரசு பேருந்து🚌 கடத்தலா❓

  |   செய்திகள்

மதுரையில் மாட்டுதாவணி பேருந்து🚌 நிலையத்திலிருந்து பேருந்து கடத்தப்பட்டது. நேற்று, இந்த பேருந்து நிலையத்தில் 7⃣வது நடைமேடையில் ராஜபாளையம் பணிமனையை சேர்ந்த மதுரை -செங்கோட்டை அரசு பேருந்து நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3:50 மணிக்கு பேருந்தை இயக்க வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர், பேருந்து இல்லாததை பார்த்து அதிர்ச்சியானார்கள்😱. இதுகுறித்து பேருந்து டிரைவர் தங்கமாரிமுத்து அண்ணாநகர் 👮போலீஸ் நிலயத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் காணாமல் போன அரசு பேருந்து🚌 சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாக இன்று காலை 6.30 மணியளவில் பூவந்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பேருந்தை கடத்தியவர்கள் யார் என்றும்❓ எதற்காக அரசு பேருந்தை கடத்தினார்கள் என்பது குறித்தும் 👮போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬