இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே விறுவிறுப்பான முதல் டெஸ்ட் 👍

  |   கிரிக்கெட்

லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதல் நாள் 6⃣ விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்திருந்தது. ⭐மிஸ்பா உல் ஹக் 110💯 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று(15/7/2016) 2⃣வதுநாள் ஆட்டம் தொடங்கியது. மிஸ்பா 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 99.2 ஓவர்களில் 339 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆல் ரவுண்டர் ⭐கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். இவருக்கு துணையாக பிராட் 3⃣ விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. யாசிர் ஷா அபாரமாக பந்து வீசி 3⃣ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணியில், ⭐குக் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். தற்போது இங்கிலாந்து அணி 192 ரங்களுக்கு 5⃣ விக்கெட்களை இழந்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬