விரைவில் குணம் பெற்று வீடு🏡 திரும்புவேன்’ 🔈 ⭐கமல்.

  |   Kollywood

⭐கமல்ஹாசனுக்கு, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது😟 .அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்திவுள்ளனர். நலம் விசாரித்து வந்த ரசிகர்களுக்கு😍 , வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார் ⭐கமல் ஹாசன்.

அந்த வாட்ஸ்அப் செய்தியில்:-
‘எனது உடல்நலம் குறித்து கவலைப்படும் ரசிகர்கள் மற்றும் நண்பர்களை எண்ணி மனம் நெகிழ்கிறேன். பல விபத்துக்கள் நடந்தும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம். எனது உடல்நலம் குறித்த தெளிவை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்’ என்று 🔈கூறியுள்ளார் கமல்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS