💃கண்டீல் பாலோச்சின் கொலையாளி கைது⛓

  |   செய்திகள்

பாகிஸ்தானின், மாடல் கண்டீல் பாலோச்சை அவரது அண்ணன் வாசிம் கவுரவ கொலை செய்துள்ளார். கண்டீல் பாலோச் சமூக வலைத்தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதற்கு அவரது அண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் சிலரிடமிருந்தும், தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துக்கொண்டிருந்ததால், கடந்த 3⃣ வாரங்களுக்கு முன் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை மந்திரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிக்கு ✍கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதை 👮காவல்துறை மறுத்துள்ளது. இதனால் அவர் முல்தானில் உள்ள தனது சொந்த 🏡வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில் முல்தான் நகரில் வீட்டில் கண்டீல் பாலோச் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசிம் செய்தியாளர்களிடம் பேசுகையில்🔈 ’கவுரவத்திற்காக கொலை செய்ததாகவும், அதில் தனக்கு எவ்வித வருத்தமும் 😲இல்லை’ என்றும் தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬