காஷ்மீரில் கூடுதலாக 2000 வீரர்கள் நிறுத்தப்பட்டனர்😳

  |   செய்திகள்

ஹிஸ்புல் முஜாக்தீன் தீவிரவாதி☠ பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 💣 கலவரம் பரவாமல் இருக்க காஷ்மீர் பள்ளத்தாக்கில், 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் தொலைபேசி நிறுவனங்களில் 📱செல்போன் மற்றும் இணையத்தள📶 சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும்🏫 மூடப்பட்டுள்ளன😟. இதனால், அந்த 10 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு😔 ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பந்தி போரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வன்முறையாளர்கள் திடீர் தாக்குதல்😡 நடத்தினர். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் துப்பாக்கி🔫 சூடு நடத்தினார்கள். இதில் 3⃣ பேர் காயம் அடைந்தனர். இதனால், பந்திபோரா மாவட்டத்துக்கு கூடுதலாக 2000 மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்கு சுமார் 3000 CRPF வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில், ராணுவ வீரர்களில் 1500 பேர் காயம் அடைந்துள்ளனர்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS