துருக்கியில் 44 நீதிபதிகளும்⚖, 34 ராணுவ தளபதிகளும் கைது⛓

  |   செய்திகள்

துருக்கி அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையில் உள்ள ஆட்சியை கவிழ்க்க, சனிக்கிழமை(16/07/2016) இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதையொட்டி ராணுவ படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 265 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு ஆதரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் 34 ராணுவ தளபதிகளும், 44 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2745 நீதிபதிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬