ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து😲, தமிழக அரசு மேல்முறையீடு⚖

  |   செய்திகள்

சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002 ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி ஒரு கும்பல் வீடு🏡 புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்😟. தற்போது, இந்த வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 9⃣ பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து 2⃣ வாரத்தில் பதிலளிக்க எதிர்தரப்பினருக்கு உயர் நீதிமன்றம்⚖ உத்தரவிட்டுள்ளது. சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, கதிரவன், ரவி சுப்பிரமணியம், சுந்தரேசஅய்யர், ரகு, அப்பு, மீனாட்சி சுந்தரம், ஆனந்த குமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்ன குமார்ஆகிய 12 பேர் மீது 👮போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரவிசுப்பிர மணியம் அப்ரூவராக மாறினார். வழக்கு விசாரணையின் போது கதிரவன் கொலை செய்யப்பட்டார். அப்பு இறந்து விட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬