சமீபத்திய 🎥 கபாலி செய்திகள்📰

  |   Kollywood

🔰 தமிழக அரசு ‘கபாலி’ படத்திற்கு வரிவிலக்கு வழங்கியுள்ளது. தணிக்கை குழுவும், கட் ஏதும் கொடுக்காமல், 'யு' சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது👍.

🔰 ⭐ சிம்பு தற்போது 🎥‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ஏற்பாடு செய்துள்ளாராம் சிம்பு😳.இது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தள்ளது😃.

🔰 கபாலி படத்தின் எடிட்டிங் பணியை செய்துள்ள பிரவீனிடம், ⭐ விஜய் ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம். விஜய்யும் இப்படம் பார்க்க ஆவலாய்😍 உள்ளது தெரிகிறது.

🔰 ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்காக ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’யில் பணிபுரியும் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்காக விடுமுறை அளித்துள்ளார் 🎬 வெங்கட் பிரபு. மேலும், ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் 🎥‘பலூன்’ படக்குழுவும் ‘கபாலி’ படத்தை பார்க்க படக்குழுவினருக்கு விடுமுறை அளித்துள்ளது. ‘பலூன்’ படத்தை 🎬 சினிஷ் இயக்குகிறார்.

🔰 கபிலன் எழுதிய 🎶“உலகம் ஒருவனுக்காக...” என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் சில வரிகள் சிலரை புண்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டு உள்ளன. எனவே அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று சர்ச்சை எழுந்துள்ளது😯.

🔰 கபாலியில் குமுதவல்லி நடித்துள்ள 💃 ராதிகா ஆப்தே, படப்பிடிப்புக்காக முதல் நாள் நடந்த ‘போட்டோஷூட்’டுக்கு சென்றபோது கேரவனுக்கு வெளியே தனக்காக காத்திருந்து வரவேற்றாராம் 🌟 சூப்பர் ஸ்டார். எந்த நடிகர் இவ்வாறு செய்வார் என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬