👊விஜேந்தர் சிங் தேசியக் கொடியை🇮🇳 அவமதித்ததாரா⁉

  |   செய்திகள்

டெல்லியில் நடந்த மிடில்வெயிட் 👊குத்துச்சண்டை போட்டியில், 🇮🇳இந்தியாவின் விஜேந்தர் சிங் ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியின் போது இந்தியாவின் தேசியக்கொடியை அவமதித்ததாக விஜேந்தர் மீது உல்ஹாஸ் என்பவர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘ விஜேந்தர் சிங், இந்திய தேசியக்கொடியின் வண்ணத்தில் சார்ட்ஸ் (அரைடவுசர்) அணிந்து👊குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். இது 🇮🇳இந்திய தேசியக் கொடியை அவமதிப்பதாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்😳. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி அவர் நியூ அசோக் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS