துருக்கியில் 3⃣ மாதம், அவசர நிலை பிரகடனம்😱

  |   செய்திகள்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 246 பேர் கொல்லப்பட்டனர்😱. இந்த சூழ்நிலையில், அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் எர்டோகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது👍. பின்னர் பேசிய 👔அதிபர் எர்டோகன்🔈, “துருக்கி ஒரு சுமூகமான சூழ்நிலையை எட்டுவதற்காகவும், மீண்டும் ஆட்சி கவிழாமல் இருக்கவும், 3⃣ மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என அறிவித்தார்😳. இயல்புநிலை இன்னும் திரும்பாத துருக்கியில் இதுவரை 600 பள்ளிக்கூடங்கள்🏫 மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்😔. இவை அனைத்தும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தான் என்றும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் தியாகிகள் ஆவர் என்றும் அவர் கூறினார்😐.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬