ஜாமினில் வெளியே வந்த பியுஷ் மனுஷ்😌

  |   செய்திகள்

சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல்🌳 போராளியும், காலநிலை:partly_sunny_rain: மாற்ற ஆர்வலருமானவர் பியுஷ் மனுஷ். இவர், சேலம் குடிமக்கள் பேரவை என்ற அமைப்பின் தலைமை யேற்று செயல்பட்டுவருகிறார். சேலம் மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனி ஒருவனாக இருந்து ஒரு காட்டை🌲 உருவாக்கியவர். கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது, அதற்கு போராட்டம் நடத்திய பியுஷ், மாற்றாக ஒரு போக்குவரத்து சாலையை🛣 அமைத்து பின்னர், மேம்பாலம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார். அதற்குள் மேம்பாலம் கட்ட குழி தோண்டப்பட்டதால், ஆத்திரம்😠 அடைந்த பியுஷ் அவரது எதிர்ப்பை தெரிவிக்க அந்த குழியினுள் இறங்கினார். உடனே போலீசார்👮 அவரை வெளியேற்றி, பியுஷையும் அவருடன் போராடிய இருவரையும் கைது⛓ செய்து, சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் சித்திரவதை செய்து வந்தனர். நேற்று ஜாமினில் வெளியே வந்த இவர். சிறையில் அவருக்கு நடந்த கொடுமை பற்றி விலாவரியாக கூறினார்😢. 30 போலீசார் அவரை அடித்ததாக😔 அவர் கூறியுள்ளார். மேலும் அவர், 👮 காவல் துறை மற்றும் சிறையின் மீது தனக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று தெரிவித்தார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬