கோலாலம்பூரில் கொங்கு தமிழர் மாநாடு👏

  |   செய்திகள்

சுமார் ₹ 3⃣ கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8⃣ சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2⃣ லட்சம் தமிழர்களும் அடங்குவர். இந்த பிரிவினர் சார்பில் மலேசிய கொங்கு தமிழர் அமைப்பில் 80,000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் முதலாவது கொங்கு தமிழர் மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்🔈, "அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மொழியும், கலாசாரமும் மலேசியாவில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலேசிய மாணவர்களுக்கு தொடக்க கல்வி முதல் தமிழ் மொழியை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகிறது. 🇮🇳இந்தியாவும், மலேசியாவும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬