🌱பியூஷ் மனுஷ் தாக்குதல்👊 தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்😳

  |   செய்திகள்

வினுபிரியா தற்கொலையில் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டியதாக 👮போலீசுக்கு எதிராகவும், முள்வாடி மேம்பாலம் கட்டுவதற்கு முன்பாக தற்காலிக வழி அமைத்துத்தர வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர், சேலத்தை சேர்ந்த 🌱 பியூஸ் மனுஷ். மேம்பாலப்பணிகளை தடுத்து நிறுத்தியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் விடுதலையான அவர், தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்தார். அதில் அவர் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து, கைகளை கட்டி, 30 உறுப்பினர்களை கொண்ட குழு தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை தேசிய மனித உரிமைகள் கமிஷன் விசாரணைக்கு எடுத்துள்ளது. “பியூஸ் மனுஷ் கூறிய குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, மனித உரிமைகள் மீறல்” என கருத்து தெரிவித்த தேசிய மனித உரிமைகள் கமிஷன் இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், 👮போலீஸ் DGPக்கும் 2⃣ வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீசு📜 அனுப்பி உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬