65 முறையாக ✈விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது😱

  |   செய்திகள்

சென்னை விமான✈ நிலையத்திலுள்ள கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடி ஆகியவை அடிக்கடி உடைந்து வீழ்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி🕙 அளவில் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலையத்துக்குள் புறப்பாடு பகுதியில் உள்ள 17வது வாசலில் இருந்த 7⃣ அடி உயரம், 4⃣ அடி அகலம் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த 👩பெண் போலீசுக்கு👮 காயம் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. 65 முறையாக சென்னை விமான✈ நிலையத்தில் கண்ணாடி உடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தானியங்கி கண்ணாடி எவ்வாறு உடைந்தது என்றும் விசாரித்து வருகிறார்கள். மேலும் விமான✈ நிலையத்தில் உள்ள எல்லா கண்ணாடிகளையும் பரிசோதித்து வருகிறார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬