🌟 சூப்பர்ஸ்டாரின் அடுத்த அதிரடி 🎥'2.0' 😮

  |   Kollywood

🌟சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது, ரஜினிகாந்தை வைத்து 2.0 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படப்பிடிப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பூந்தமல்லி அருகே பலகோடி ரூபாய் செலவில் சென்னை நகரம் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். பிரம்பாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் பலமாடி கட்டிடங்கள், தார் ரோடுகள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஓரிரு வாரத்தில் 🌟ரஜினிகாந்த், 👿அக்‌ஷய்குமார், 💃எமிஜாக்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர்.

Original Image Credit: IANS