நாளை 🔬அப்துல்கலாம் சிலை திறப்பு👍

  |   செய்திகள்

நாளை(27/07/2016) இந்தியா🇮🇳 முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் APJ அப்துல் கலாமின்🔬 முதலாம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு நினைவிடத்தில், அப்துல் கலாமின் 7⃣அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்படவுள்ளது👏. ஐதராபாத்தில் உருவாக்கப்பட்ட அந்த சிலை, நேற்று இரவு அங்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் நிறுவப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள கலாமின் தேசிய நினைவகம் மற்றும் அறிவுசார் மையம், மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை காலை 9⃣ மணிக்கு🕘 போய்க்கரும்பில் நடக்கிறது. இவ்விழாவில், மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். மத்திய இணை மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோரும் இடம் பெறுகின்றனர்👍. மேலும், நினைவு நாள் நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம் இண்டர்நே‌ஷனல் அறக்கட்டளை சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள்🌱 வழங்கப்பட உள்ளதாக அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்👍. இதுதவிர அறிவுசார் புத்தகங்களும்📖 வழங்கப்பட உள்ளன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬