19 பேர் பலியான டோக்கியோ கத்தி🔪 குத்து😱

  |   செய்திகள்

ஜப்பான் நாட்டின் தலைநகரான, டோக்கியோ மாகாணத்தில், மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் உயிருக்கு போராடிவருகின்றனர். அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து இல்லத்தின் நிர்வாகி ஒருவர் 👮போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அப்போது, 26 வயதுமிக்க வாலிபர் ஒருவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் 👮போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாலை 3.00🕒 மணியளவில் அந்த வாலிபர் தானாகவே அவர் போலீசாரிடம்👮 சரணடைந்தார். அந்த நபர் தாக்குதலுக்கு உள்ளான இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்று கூறப்படுகிறது. "மாற்றுத்திறனாளிகளாக வாழ்வதற்கு பதிலாக அவர்கள் இறப்பது மேல்" என்று அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬