இன்று(27/07/2016) அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள்🙏💐

  |   செய்திகள்

🎤 அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ராமேசுவரத்தில் மணிமண்டபம், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது👍. 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலை, ஐதராபாத்தில் உருவாக்கப்பட்டது. அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இன்று காலை முதலே அங்கு ஏராளமானோர் திரண்டு, அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்🙏💐. புதுச்சேரியை சேர்ந்த சிற்ப கலைஞர் குபேந்திரன் அப்துல் கலாமின் 100 முகம் கொண்ட மணல் சிற்பங்களை செய்தார். மத்திய மந்திரி வெங்கையாநாயுடு சிலையை திறந்து வைத்தார்👏. மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதா கிருஷ்ணன், சுபாஷ் ராம் ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS