60அடி கிணற்றில்🌊 நீச்சலடிக்கும் 2½ வயது சிறுவன்👦

  |   செய்திகள்

தினமும் 1⃣ மணிநேரம் வரை கிணற்றில் குளித்து நீச்சலடித்து வரும்வயது 2½ வயது அஸ்வின். வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் (வயது 2½) தினமும் அவர்களுக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்து ஆனந்தமாக நீச்சலடித்து குளிக்கிறான். 2½ வயதில் 60 அடி ஆழ தண்ணீரில் சிறுவன் குளிப்பது அப்பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அஸ்வின் தந்தை அங்கமுத்து கூறியதாவது, "எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நீச்சல் தெரியும். அஸ்வின் 2⃣ வயதிலேயே என்னுடன் குளிக்க வர ஆரம்பித்தான். அப்போது கயிறுகட்டி கிணற்றுக்குள் நீச்சல் கற்றுக் கொடுத்தேன். பின்னர் 5kg கேனில் கட்டிப்போட்டு கிணற்றில் நீச்சல் பழக்கினேன். கடந்த 1⃣ மாதங்களுக்கு முன்பு அவன் நன்றாக நீச்சல் கற்றுக் கொண்டான்." என்று கூறினார்.👍

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬