ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க கூடாது 🔈 எதிர்க்கட்சிகள் அமளி😠

  |   செய்திகள்

அரசு மானியங்களை பெற ஆதார் அடையாள அட்டையை 🎫 கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா இன்று 3⃣ முறை ஒத்திவைக்கப்பட்டது. காலையில் இப்பிரச்சனை எழுந்ததால் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது, பின் 15 நிமிடமும், மீண்டும் அமளி நீடித்ததால் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி, இப்பிரச்சனையை எடுத்துக் கொள்ளக்கோரி திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகரால் இந்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் இணைந்துக் கொண்டது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இதைப்பற்றி கூறுகையில்🔈 , “ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால், தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். நேரடி மானிய திட்டத்தின்படி அரசின் மானியம் நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போது ஊழல், தரகர்கள் மற்றும் முறைக்கேட்டை தவிர்க்க நேரடி மானிய திட்டம் அவசியமானது. ஒட்டுமொத்த மக்களும் அடையாள அட்டையை பெரும் வரையில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படாது என்று உறுதி அளிக்கிறேன்,” என்று கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬