நேபாள மழையில்⛈ 54 பேர் பலி😱

  |   செய்திகள்

நேபாளத்தில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால்⛈ வெள்ளம் பெருக்கெடுத்து, டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டுள்ளது. இந்த வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தகோஷி ஆற்றில் உள்ள 56 டாம்களில் 37 திறந்து விடப்பட்டன😔. இதனால், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள்🏠 மண்ணுக்குள் புதைந்தன. அப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை⛈, வெள்ளம்🌊 மற்றும் நிலச்சரிவில் 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬