பள்ளி கட்டணம் கட்டாததால், மாணவி தற்கொலை😱

  |   செய்திகள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காவலாளியாக வேலை செய்பவர் ரத்தன் சிங் தோமர். இவரது மகள் ஜாஸ்மின்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 3⃣ மாதங்களாக மகளின் பள்ளிக்கு🏫 கட்ட வேண்டிய கட்டணத்தை, குடும்ப கஷ்டம் காரணமாக ரத்தன் சிங் தோமர் செலுத்தவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவியின் வீட்டுக்கு அவர் படிக்கும் 🏫பள்ளியை சேர்ந்த 6⃣ ஆசிரியர்கள் வந்து, ரத்தன் சிங் தோமருடன் வாக்குவாதம் செய்து, அவரை அடித்து துன்புறுத்தியதோடு, போலீசாரை👮 வரவழைத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்துச் செல்ல வைத்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த ஜாஸ்மின், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் இந்த முடிவுக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று கூறி, இதற்கு காரணமானவர்களை கைது⛓ செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, 4⃣ ஆசிரியர்களை போலீசார்👮 கைது செய்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬